Enable Javscript for better performance
ரூ.20ஆயிரம் காப்பர் கம்பிகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.20ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருடு போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

     திண்டுக்கல் அடுத்துள்ள தாமரைப்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஸ்டீல் கம்பெனி உள்ளது. தற்போது செயல்பாடில்லாமல் உள்ள இந்த கம்பெனியில், ராஜா தன்வீர் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

     இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை கம்பெனிக்கு வந்த ராஜா, வாசல் திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த மோட்டார்களை உடைத்து, அதிலிருந்த காப்பர் காயில்கள் திருடு போனது தெரிந்துள்ளது.

     இதனை அடுத்து கோயம்புத்தூரில் இருக்கும் உரிமையாளர் க.வெங்கடேஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெங்கடேஷ் திங்கள்கிழமை, வடமதுரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai