Enable Javscript for better performance
வேடசந்தூரில் ஜமாபந்தி பொதுமக்களிடம் குறை கேட்ட ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    வேடசந்தூரில் நடைபெற்ற ஜமாபந்தியில், மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

     திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பங்கேற்று, மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அவர் தெரிவித்தது:

     திண்டுக்கல் மாவட்டத்தில் 9 வட்டங்களில் உள்ள 358 கிராமங்களிலும் ஜமாபந்தி நடத்தப்படுகிறது. வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் 1324-ஆம் பசலிக்கான ஜமாபந்தியில் ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், லந்தகோட்டை, கருங்கல், தீண்டாக்கல் தொகுப்பு, ஆலம்பாடி, கோட்டாநத்தம், தோளிப்பட்டி தொகுப்பு, கரிக்காலி ஆகிய கிராமங்களில் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

     இதில் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் மனுக்களின் மீது விரைந்து தீர்வு காணும் வகையில் வழங்கப்படும் மனுவுடன் மூலபத்திர நகல், பாகப்பிரிவினை பத்திர நகல், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை வரைபடம் உள்ளிட்ட தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக வருவாய் துறையினர் மூலம், துண்டுப் பிரசுரம் மூலம் விளம்பரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்திருந்த 9 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளன.

    முன்னதாக வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, கூடுதல் கட்டடத்தினை ஆட்சியர் ந.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.     

     நிகழ்ச்சியில் வேடசந்தூர் வட்டாட்சியர் நே.இந்துமதி, நில அளவை உதவி இயக்குநர் கு.சுந்தரராஜன், மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் தாஜீதீன், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

    நத்தம்:   நத்தத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 19 மனுக்களுக்கு உடனடித் தீர்வு அளிக்கப்பட்டது.

    நத்தம் தாலுகா அலுவலகத்தில் சாத்தம்பாடி, செல்லப்பநாயக்கன்பட்டி, லிங்கவாடி, புன்னப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் உத்தமன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பட்டா மாறுதல், உட்பிரிவு உள்ளிட்ட 61 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 19 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்கப்பட்டது.

    இதில் தாசில்தார் நாராயணன், வேளாண்மை உதவி இயக்குநர் ரவிபாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் கணேசன், பாலமுருகன், சுரேந்திரன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஜமாபந்தி வரும் மே 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai