Enable Javscript for better performance
வேடசந்தூர் வட்டத்தில் மருத்துவக் காப்பீட்டு சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    வேடசந்தூர் வட்டத்தில் மருத்துவக் காப்பீட்டு சிறப்பு முகாம்

    By dn  |   Published on : 28th May 2014 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேடசந்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், புதன்கிழமை(மே 28) முதல் ஜூன் 28ஆம் தேதி வரை பகுதிவாரியாக புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளது:

     தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு,  புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேடசந்தூர் வட்டத்தில் இதுவரை புகைப்படம் எடுக்காதவர்களுக்கு புதன்கிழமை(மே 28) வி.பூதிபுரம் பகுதியிலும், வியாழக்கிழமை(மே 29) வி.புதுக்கோட்டை மற்றும் கைத்தியன்கோட்டையிலும், வெள்ளிக்கிழமை(மே 30) குட்டம் மற்றும் வேல்வார்கோட்டையிலும், சனிக்கிழமை(மே 31) வடமதுரை மற்றும் வேல்வார்கோட்டையிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

     அதன்தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 1) குளத்தூர், வேலாயுதம்பாளையம், திங்கள்கிழமை(ஜூன் 2) தென்னம்பட்டி, பெரும்புள்ளி, செவ்வாய்க்கிழமை(ஜூன் 3) பிலாத்து, குளத்தூர், புதன்கிழமை(ஜூன் 4) பாடியூர், காணப்பாடி, வியாழக்கிழமை(ஜூன் 5) இராமநாதபுரம், அய்யலூர், வெள்ளிக்கிழமை(ஜூன் 6) சித்தூவார்பட்டி, மோர்பட்டி, சனிக்கிழமை(ஜூன் 7) கொல்லப்பட்டி, புதூர், ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 8) கொம்பேரிபட்டி, பாகாநத்தம், திங்கிள்கிழமை(ஜூன் 9) சுக்காம்பட்டி, பஞ்சம்தாங்கி, செவ்வாய்க்கிழமை(ஜூன் 10) ஆர்.கோம்பை, ஈ.சித்தூர், புதன்கிழமை(மே 11) ஸ்ரீராமபுரம், மால்வார்பட்டி, வியாழக்கிழமை(ஜூன் 12) எரியோடு, மாரம்பாடி, வெள்ளிக்கிழமை(ஜூன் 13) நாகையன்கோட்டை, வெம்பூர்,

    சனிக்கிழமை(ஜூன் 14) நல்லூர், வேலம்பட்டி, ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) உசிலம்பட்டி, அம்மாபட்டி, திங்கள்கிழமை(ஜூன் 16) நத்தபட்டி, கூவக்காப்பட்டி, செவ்வாய்க்கிழமை(ஜூன் 17) பாலப்பட்டி, குளத்துப்பட்டி, புதன்கிழமை(ஜூன் 18) குடப்பம், பாளையம், வியாழக்கிழமை(ஜூன் 19) உல்லியக்கோட்டை, சின்னலுப்பை, வெள்ளிக்கிழமை(ஜூன் 20) வடுகம்பாடி, மல்லபுரம், சனிக்கிழமை(ஜூன் 21) ஆர்.புதுக்கோட்டை, ஆர்.கோம்பை,

    ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 22) வாணிக்கரை, கூம்பூர், திங்கள்கிழமை(ஜூன் 23) கரிக்காலி, ஆலம்பாடி, செவ்வாய்க்கிழமை(ஜூன் 24) ஆர்.வெள்ளோடு, கோட்டாநத்தம், புதன்கிழமை(ஜூன் 25) கோட்டாநத்தம், தோளிப்பட்டி, வியாழக்கிழமை(ஜூன் 26) திருக்கூர்ணம், டி.கூடலூர், வெள்ளிக்கிழமை(ஜூன் 27) கருங்கல், தீண்டாக்கல், சனிக்கிழமை(ஜூன் 28) லந்தக்கோட்டை ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

     ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்துக்கும் குறைவாக பெறுவோர், குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகலுடன் சிறப்பு முகாமுக்கு வந்தால், வருமானச் சான்றிதழ் வழங்கப்பட்டு புகைப்படம் எடுக்கப்படும். இதன் மூலம் ஏழை குடும்பங்களில் உள்ளோர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை, 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை மருத்துவச் செலவு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai