Enable Javscript for better performance
காவல்துறை முயற்சியில் 200 வழக்குகளுக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    காவல்துறை முயற்சியில் 200 வழக்குகளுக்கு தீர்வு

    By திண்டுக்கல்  |   Published on : 29th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் நகர், புறநகர் மற்றும் வேடசந்தூர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் அதிக அளவிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை அடுத்து, இந்த வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது. திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை அதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 350க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், 200 மனுக்கள் வரை தீர்வு காணப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai