Enable Javscript for better performance
குக்கிராமங்களில் ஏடிஎம் மையம்:ஆட்சியர் பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

    குக்கிராமங்களில் ஏடிஎம் மையம்:ஆட்சியர் பரிந்துரை

    By திண்டுக்கல்  |   Published on : 29th May 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், 3 குக்கிராமங்களுக்கு ஒரு ஏடிஎம் மையம் தொடங்க வேண்டும் என, வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

      திண்டுக்கல் மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமை வகித்தார்.  நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் எல். சஞ்சீவி முன்னிலை வகித்தார்.  கூட்டத்துக்குப் பிறகு, ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்தது:

    கடந்த ஆண்டு வழங்கப்பட்ட விவசாயக் கடன், கல்விக் கடன், சிறுதொழில் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட முன்னுரிமை கடன்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

      2013-2014 நிதியாண்டில், மாவட்ட அளவில் 123 சதவீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 21 சதவீதம் அதிகமாகும்.

      வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில், வங்கியாளர்கள் அதிக அளவில் கடனுதவி வழங்கவேண்டும். கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், மூன்று குக்கிராமங்களுக்கு ஒரு ஏடிஎம் மையம் அமைத்திட வங்கிகள் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்த, வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

      கூட்டத்தில், முன்னோடி வங்கி மேலாளர் என். ஜான் நெல்சன், கனரா வங்கியின் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவன இயக்குநர் அர்ஜூன் முத்தையா, பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai