Enable Javscript for better performance
கேரளத்துக்கு அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்துக்கு அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய ஒருவர் கைது

    By கம்பம்  |   Published on : 29th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கம்பத்திலிருந்து கேரள அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியவரை, சோதனைச் சாவடியில் கேரள போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

      கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து வண்டிப் பெரியாறிலிருந்து கம்பத்துக்கு தினமும் 3 முறை இயக்கப்படுகிறது. இந்த பேருந்து, புதன்கிழமை மாலை கம்பத்திலிருந்து வண்டிபெரியாறுக்கு புறப்பட்டது. ரகசியத் தகவலின் அடிப்படையில், தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில், இப்பேருந்தை கேரள சுங்கத்துறை போலீஸார் சோதனை செய்தனர்.   அப்போது, பேருந்துக்குள் சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்ட ஒருவரைப் பிடித்து சோதனையிட்டதில், அவர் வைத்திருந்த பையில் இரண்டரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

      பின்னர் நடத்திய விசாரணையில் அவர், கேரள மாநிலம் ஈரற்றுபேட்டைச் சேர்ந்த அப்துல் சலாம் என்று தெரியவந்தது. இவர், கம்பத்திலிருந்து ஒரு கிலோ கஞ்சா ரூ.5 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்று, கேரளத்தில் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வந்ததாகத் தெரிவித்தார். குமுளி போலீஸார் அப்துல் சலாம் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai