Enable Javscript for better performance
ஜூன் 1இல் கிராம சபைக் கூட்டம் - Dinamani

சுடச்சுட

    

      திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜூன் 1 முதல் (ஞாயிற்றுக்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளது: அந்தந்த பகுதி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில், குடிநீர் விநியோகம், பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை நிரந்தரமாக மூடுதல், கருவேல மரங்களை அழித்தல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைத்தல் மற்றும் பராமரித்தல், பார்த்தீனியச் செடிகளை அழித்தல், பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்தல், இறைச்சி கடைகளில் சுகாதாரம் பேணுதல், சூரிய சக்தி தெருவிளக்குகளை பராமரித்தல் போன்றவை குறித்தும், அதற்கான நிதி செலவினங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.  மேலும் புதுவாழ்வு திட்டம், மகளிர் திட்டம் மற்றும் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை கிராம ஊராட்சிகளின் நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் விவாதிக்கப்படும். எனவே பொதுமக்கள், கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai