Enable Javscript for better performance
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    போடி நகராட்சியில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

      போடியை பிளாஸ்டிக் இல்லா நகராட்சியாக மாற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சில வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து, சோதனை செய்து நடவடிக்கை எடுக்க ஆணையர் சசிகலா உத்தரவிட்டிருந்தார்.

       அதன்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான் சையது இப்ராஹிம், செந்தில்குமார், தர்மராஜ், கோபாலகிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர்கள் கருப்பணன், முருகதாஸ், இளங்கோ, சுப்புராஜ் ஆகியோர் தனித்தனி குழுவாகப் பிரிந்து, போடி நகராட்சிப் பகுதி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

      இதில் 9 கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கடைகளுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

     மேலும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. தொடர்ந்து சோதனை நடைபெறும் என, நகராட்சி சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai