Enable Javscript for better performance
பழனி மலை கோயிலில் கார்த்திகை திருநாள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

      பழனி மலை கோயிலில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரமும், அமாவாசை திதியும் இணைந்து புதன்கிழமையன்று வந்ததால், லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக் கோயிலில் சுவாமியை தரிசிக்க குவிந்தனர்.

      இதனால், மலை கோயிலுக்குச் செல்லும் ரோப் கார் மற்றும் விஞ்ச் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். மலை கோயிலிலும் கட்டண தரிசன வாயில், இலவச தரிசன வாயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

      பக்தர்களுக்கு போதிய சுகாதாரம், பாதுகாப்பு மற்றும்  குடிநீர் வசதிகள் திருக்கோயில் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

      மலை கோயில் கார்த்திகை மண்டபத்தில் பழனி திருமுருக பக்த சபா சார்பில், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் திருமலைசாமி, தேவி ஆகியோரது சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. திருக்கோயில் சார்பில் 108 திருவிளக்கு பூஜையும் விமரிசையாக நடைபெற்றது.         

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai