Enable Javscript for better performance
பழனி வைகாசி விசாகம்: ஜூன் 5இல் கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திர விழாவைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 5 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

      பழனி வைகாசி விசாகத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூன் 5ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கி, தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறுகிறது.  விழாவின் ஆறாம் நாளான ஜூன் 10ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

      விழா நாள்களில், சுவாமி தங்க மயில், வெள்ளி காமதேனு, தங்கக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.   முக்கிய நிகழ்ச்சியாக, ஏழாம் நாளான ஜூன் 11ஆம் தேதி வைகாசி விசாகத்தன்று, மலை கோயில் சன்னதி அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்படும்.  பெரியநாயகியம்மன் கோயில் நிலையிருந்து மாலை 4.30 மணிக்குத் தேர் புறப்பாடாகி, நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் நடைபெறுகிறது.

    கல்லூரி மாணவி கடத்தல்: போலீஸில் தந்தை புகார்

    வத்தலகுண்டு, மே 28: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது 17 வயது மகள் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலையில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். அங்கு அவர் விடுதியில் தங்கியிருந்தார். விடுமுறைக்கு தனது சொந்த ஊரான கோட்டைப்பட்டிக்கு வந்திருந்தார்.விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி செல்ல அவரது தந்தை மே 27ஆம் தேதி கொடைக்கானலுக்கு பேருந்தில் அனுப்பி வைத்தார்.

    ஆனால் இன்று வரை கல்லூரிக்கு செல்லவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தந்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்பு பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த முருகன் மகன் கருப்பையா (21) ஆட்டோ டிரைவர், தனது மகளை கடத்தியுள்ளார், என வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் வத்தலகுண்டு காவல்துறை ஆய்வாளர் வினோஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ரயில் பாதையில் மரம் விழுந்தது

    பழனி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் 1.30 மணி நேரம் தாமதம்

    ஒட்டன்சத்திரம், மே 28:    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பலக்கனூத்து அருகே  பழனி-திண்டுக்கல் ரயில் பாதையில் மரம் சாய்ந்து  விழுந்தது.

      அதையடுத்து, திண்டுக்கல்-பழனி பயணிகள் ரயில் அக்கரைப்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதேபோல், பழனி-மதுரை பயணிகள் ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.   தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, ரயில் பாதையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றினர். அதன்பின்னர், அக்கரைப்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. மேலும், பழனியில் இருந்து சென்னை செல்லும் பழனிமுருகன் எக்ஸ்பிரஸ் ரயிலும் சுமார் 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai