Enable Javscript for better performance
போடி பகுதியில் பழுதடைந்த மின் தளவாடங்கள் மாற்றம்: மின்தடை அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    போடி பகுதியில் பழுதடைந்த மின் தளவாடங்கள் மாற்றம்: மின்தடை அறிவிப்பு

    By போடி,  |   Published on : 29th May 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போடியில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்காக, மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக, மின்வாரியம் தெரிவித்துள்ளது.

      தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், போடி உபகோட்ட உதவிச் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

      போடி உபகோட்டத்துக்குள்பட்ட போடி நகராட்சி எல்லைப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிக்காக, பழுதடைந்த பழைய மின் கம்பி, மின் கம்பம், மின் மாற்றிகள் மற்றும் மின் தளவாடச் சாமான்களை அகற்றிவிட்டு, புதிதாக மாற்றி அமைக்கப்படவிருக்கிறது. எனவே, ஆங்காங்கே மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்

    ளது.

       கீழ்கண்ட தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை நேரங்களில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மின்தடை ஏற்படும் தேதி மற்றும் பகுதிகள் விவரம்:

      வரும் 29ஆம் தேதி (வியாழக்கிழமை) - கீழராஜ வீதி மற்றும் கீழத்தெரு பகுதிகள். 30ஆம் தேதி- பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள். 31ஆம் தேதி- சுப்பிரமணியர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள், சந்தைப்பேட்டை பகுதி மற்றும் காமராஜர் பஜார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai