வேடசந்தூர் மாரியம்மன் கோயில் திருவிழா
By திண்டுக்கல் | Published on : 29th May 2014 12:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழா, செவ்வாய்க்கிழமை சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அப்போது, கொடகனாற்றிலிருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மற்றும் கரகம் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நேர்த்திக் கடனாக அக்னிச் சட்டி எடுத்தும், மா விளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும், ஆண்கள், பெண்கள் என மொத்தம் 172 பேர் பூக்குழி இறங்கினர். புதன்கிழமை நடைபெற்ற மஞ்சள் நீராட்டுக்குப் பிறகு, கரகம் ஆற்றில் விடப்பட்டது. விழாவில், வேடசந்தூர், ஆர்.எச். காலனி, நாகம்பட்டி, கருக்காம்பட்டி, கொசவபட்டி, அடைக்கனூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டனர்.