Enable Javscript for better performance
இரு சக்கர வாகனம் மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தை அடுத்துள்ள எல்லப்பட்டியைச் சேர்ந்தவர் ராமன் (68). இவர், வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்டு நூறு நாள் வேலைக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

    இவர், ரெட்டியார்சத்திரம்-ஸ்ரீராமபுரம் சாலையில் ஸ்ரீராமபுரம் நோக்கிச் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக் (24) என்பவர் மோதியுள்ளார். இதில், கீழே விழுந்த முதியவர் ராமனின் தலையில் பலத்த அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரெட்டியார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai