Enable Javscript for better performance
ஊர்க்காவல் படையில் கௌரவ பதவி:விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி- Dinamani

சுடச்சுட

    

    ஊர்க்காவல் படையில் கௌரவ பதவி:விண்ணப்பிக்க ஜூன் 6 கடைசி

    By திண்டுக்கல்  |   Published on : 30th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பதவிக்கு, ஜூன் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்துள்ளது:

    இப்பதவிக்கு, பொதுநலத்தில் ஆர்வமும், சேவை மனப்பான்மையும் கொண்ட 20 முதல் 45 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் இல்லாத இந்த பதவி, கௌரவத்துக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மாவட்டக் காவல் அலுவலகம், திண்டுக்கல்-5 என்ற முகவரிக்கு, ஜூன் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டும். கூடுதல் தகவல் பெற 2420234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai