Enable Javscript for better performance
கடத்தப்பட்ட இளம்பெண் தப்பி வந்து போலீஸில் புகார்: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கடத்தப்பட்ட இளம்பெண் தப்பி வந்து போலீஸில் புகார்: 3 பேர் கைது

    By நத்தம்,  |   Published on : 30th May 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள சித்திரைகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகளை, மணப்பாறை அருகேயுள்ள சூலியாபட்டியைச் சேர்ந்த செந்தில் உள்பட 7 பேர் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளனர்.

    இதையடுத்து, பிச்சைமணி மகள் மணப்பாறை பகுதியிலிருந்து தப்பி வந்து, நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப் பதிந்து, போலீஸாருடன் சென்று குற்றவாளிகளை தேடிவந்தார். அப்போது, மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சூலியாபட்டி சோலைமலை (48), பாலமலையான்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (35), சதீஸ் (20) ஆகிய 3 பேரையும், போலீஸார் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் கைது செய்தனர். மேலும் செந்தில் என்பவர் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai