Enable Javscript for better performance
கொடைக்கானலில் ஜமாபந்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் ஜமாபந்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

    By கொடைக்கானல்  |   Published on : 30th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் ஜமாபந்தி நிகழ்ச்சியில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஜமாபந்தி நடைபெற்றது. இதற்கு, வருவாய் கோட்டாட்சியர் அ. ராமசாமி தலைமை வகித்தார். வட்டாட்சியர் மாணிக்கம் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில், வில்பட்டி, அட்டுவம்பட்டி பள்ளங்கி, கோம்பை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வீட்டு மனை, வீட்டு மனைப் பட்டா கோரியும், நிலங்களை அளந்து தரக் கோரியும், சாலை, மின் விளக்குகள், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரியும், கடந்த 2 நாள்களாக 201 மனுக்கள் அளித்துள்ளனர்.

    இதில், வருவாய்த் துறையைச் சேர்ந்த வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜமாபந்தியானது 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai