கொடைக்கானலில் புகைப்பட கண்காட்சி: 50 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
By திண்டுக்கல் | Published on : 30th May 2014 12:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா மலர் கண்காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு சார்பில், மூன்றாண்டு ஆட்சி, முழுமையான வளர்ச்சி என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இக் கண்காட்சியை, நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், வேளாண்மைத் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டனர்.
கண்காட்சியில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. 2 நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.