Enable Javscript for better performance
கொடைக்கானல் அருகே பாதிரியாரை தாக்கியதாக 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் அருகே பாதிரியாரை தாக்கியதாக 3 பேர் கைது

    By கொடைக்கானல்  |   Published on : 30th May 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் அருகே பாதிரியார் வழிபாடு நடத்த வர மறுத்ததால், அவரைத் தாக்கியதாக மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

    கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி பகுதியில் பங்குத் தந்தையாக இருப்பவர் பாப்புராஜ். இவருக்கும், அப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    புதன்கிழமை, அந்தோணி என்பவர் தனது உறவினர் இறந்துபோனதற்கு கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்து வழிபாடு நடத்த பங்குத்தந்தை பாப்புராஜை அழைத்துள்ளார். ஆனால், இதற்கு பாப்புராஜ் மறுத்துள்ளார். இதனால், அந்தோணி தரப்பினருக்கும், பாதிரியார் பாப்புராஜ் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து, இரு தரப்பினரும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், சார்பு-ஆய்வாளர் முத்துக்குமார் வழக்குப் பதிந்து, ஜான்,வினோத், பாக்கியராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai