Enable Javscript for better performance
தூக்கத்தில் தவறி விழுந்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மேல் மாடியில் தூங்கி கொண்டிருந்தவர், தவறி கீழே விழுந்து காயமடைந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பகுதியில் தனியார் பள்ளிக்கு சொந்தமான கட்டடத்தில் பெயிண்டிங் வேலை நடைபெற்று வந்தது. இதில், மதுரை மாவட்டம், திருவாதவூர் பகுதியைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ஜெகதீஸ்வரன், பாபு (எ) பாஸ்கரன் உள்ளிட்ட 6 பேர் வேலை செய்து வந்துள்ளனர்.

    புதன்கிழமை மாலை வேலை முடிந்த பின், அனைவரும் அந்த கட்டடத்தின் 2ஆவது மாடியில் தூங்கியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பாபு (எ) பாஸ்கரன் சிறுநீர் கழிக்க சென்றபோது, அங்கிருந்து தவறி கீழே இருந்த ஜெனரேட்டர் மீது விழுந்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த பாபு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து, ஜெகதீஸ்வரன் அளித்த புகாரின்பேரில், அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai