Enable Javscript for better performance
நத்தம் பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

    நத்தம் பகுதியில் உள்ள பள்ளிகளில் நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆமினா நஸ்ரின் 478 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இப்பள்ளியில் அறிவியலில் 3பேரும், சமூகஅறிவியலில் ஒருவரும் நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். நத்தம் கோவில்பட்டி துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரமேஷ்கண்ணன் 483 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றுள்ளார். இப்பள்ளியில் கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல் பாடங்களில் தலா ஒருவர் வீதம் 3 பேர் நூறு மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளனர்.

    அரவங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்மணி பள்ளி அளவில் 451 மதிப்பெண் பெற்று முதலாவதாக தேர்ச்சிபெற்றுள்ளார். அறிவியலில் பவித்ரா என்ற மாணவி நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். கோசுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தவ்லத்பேகம் 465 மதிப்பெண் பெற்று பள்ளிஅளவில் முதலாவதாக வந்துள்ளார். ஆர்.சி. சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் முத்து இன்ப கார்த்திக் 467 மதிப்பெண் பெற்று முதலாவதாக வந்துள்ளார். மேலும் இப்பள்ளியில் கணிதம் மற்றும் சமூகஅறிவியலில் தலா ஒருவரும், அறிவியலில் 5 பேரும் நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். கோமணாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பிரியா என்ற மாணவி 464 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் இப்பள்ளியில் ஒருவர் அறிவியலில் நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

    இப் பகுதியில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

    நத்தம் பகுதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஜெயந்தி என்ற மாணவி 490 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். இப்பள்ளியில் கணக்கில் 2பேரும், அறிவியலில் 7பேரும் சமூக அறிவியலில் 7 பேரும் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாலசரசுவதி என்ற மாணவி 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாவதாக வந்துள்ளார். மேலும் இப்பள்ளியில் அறிவியல் மற்றும் கணிதத்தில் தலா 2பேரும் சமூகஅறிவியலில் 3பேரும் நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.

    ஆர்.சி. மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சரோஜினி என்ற மாணவி 491 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலாவதாக தேர்ச்சி அடைந்துள்ளார். இப்பள்ளியில் கணிதத்தில் ஒருவரும் அறிவியலில் 5 பேரும் சமூக அறிவியலில் ஒருவரும் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai