Enable Javscript for better performance
நிலக்கோட்டை மெட்ரிக். பள்ளி சாதனை - Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை பெரியநாயகி-ரெங்கசாமி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    இப்பள்ளி மாணவர் சிவா, 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இரண்டாவதாக மாணவி விஷ்ணுப்பிரியா 491 மதிப்பெண்களும், மூன்றாவதாக அபர்ணாசாரல் 490 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    இப்பள்ளியில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 42 பேரும் எடுத்துள்ளனர். மேலும், கணிதத்தில் 6 பேரும், அறிவியலில் 13 பேரும், சமூக அறிவியலில் 4 பேரும், 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.

    சாதனைபுரிந்த மாணவர்களுக்கு, பள்ளியின் தலைவர் சுசீந்திரன் பரிசுகளை வழங்கினார். பள்ளிச் செயலர் கரிமலைபாண்டி, முதல்வர் ஜீவானந்தம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai