பழனியில் ஜமாபந்தி: 2 நாளில் 277 மனுக்கள்
By பழனி | Published on : 30th May 2014 12:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பழனி தாலுகா அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், ஜமாபந்தி நடைபெறுகிறது.
ஜமாபந்தியின் முதல் நாளில், மரிச்சிலம்பு, கீரனுôர், தொப்பம்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்களிலிருந்து 142 மனுக்களும், இரண்டாம் நாள் அக்கரைப்பட்டி, மானூர், 54 புதுôர் உள்ளிட்ட 9 கிராமங்களிலிருந்து 135 மனுக்களும் பெறப்பட்டன.
வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, உள்பட 2 நாள்களில் மொத்தம் 277 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 77 பட்டா மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கப்பட்டது.
மனுக்கள் மீது உடனடி விசாரணையாக, மனு வழங்கியவர்களை நேரில் அழைத்தும், அவர்களது குறைகளை கேட்டும், பின்பு அவர்கள் கொடுத்த மனுக்களின் தன்மையை ஆராய்ந்து, மாவட்ட வருவாய் அதிகாரி மனோகரன் தலைமையில், பழனி வட்டாட்சியர் வரதராஜன், தனி வட்டாட்சியர்கள் மரகதம், லீலா ரெஜினா, துணை வட்டாட்சியர்கள் ராஜேந்திரன், பழனிச்சாமி, தன்னாசித்துரை, நாச்சிமுத்து மற்றும் அந்தந்தப் பகுதி வருவாய் அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் கொண்ட குழுவினர் மனுதாரர்களுக்கு தீர்வு வழங்கினர்.