Enable Javscript for better performance
பழனி அருகே வரதமா நதி அணைக்கு நீர்வரத்து- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெய்த மழையால் வரதமாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கடந்த பல மாதங்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பருவமழை பெய்த நிலையில், பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வந்தது. இந்நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால், வரதமாநதி அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பழனி-கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி அணைக்கட்டின் மொத்த உயரம் 67.42 அடியாகும்.

    தற்போது, 43.24 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 20 கனஅடி நீர்வரத்து உள்ளது. நீர் வெளியேற்றம் 2 கனஅடியாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai