Enable Javscript for better performance
பழனி அருள்மிகு பழனியாண்டவர்பாலிடெக்னிக் கல்லுரி மாணவாகள் சேர்க்கை கலந்தாய்வு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருள்மிகு பழனியாண்டவர்பாலிடெக்னிக் கல்லுரி மாணவாகள் சேர்க்கை கலந்தாய்வு

    By பழனி,  |   Published on : 30th May 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லுரியில், நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

    இது சம்பந்தமாக, கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) பொறியாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

    2014-15ஆம் கல்வியாண்டின் இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம், 31ஆம் தேதி காலை 9 மணிக்கு, நடப்பாண்டில் 1047 முதல் 667 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும், மதியம் 1-30 மணிக்கு நடப்பாண்டில் 666 முதல் 600 மதிப்பெண்கள் வரை பெற்றவர்களுக்கும், வொக்கேஷனல் (பொறியியல்) பிரிவில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், மேலும் ஐ.டி.ஐ. படித்த அனைத்து மாணவர்களுக்கும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து, ஜூன் 2ஆம் தேதி காலை 9 மணிக்கு, வொக்கேஷனல் (கணக்குப் பதிவியல்) படித்த அனைத்து மாணவர்களுக்கும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

    மாணவர் சேர்கைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மேலே குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றவர்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், கடிதம் கிடைக்கப் பெறாதவர்களும், மேற்குறிப்பிட்ட தகுதியுள்ளவர்களும் இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

    இந்த கலந்தாய்வுக் கூட்டம், மாணவர் நேரடி சேர்க்கை ஆகியன கல்லூரியின் செயலர் மற்றும் கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai