Enable Javscript for better performance
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.5 லட்சம் முதல் கடன் உதவி- Dinamani

சுடச்சுட

    

    புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.5 லட்சம் முதல் கடன் உதவி

    By திண்டுக்கல்,  |   Published on : 30th May 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளது:

    புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில், மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதில், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தி தொடங்கப்படும் உற்பத்தி மற்றும் சேவைத் தொழிலுக்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மூலம் முறையே ரூ. 25 லட்சம் மற்றும் ரூ. 10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில், ரூ. 5 லட்சம் திட்ட மதிப்பீட்டுக்கு மேல் சேவைத் தொழில் செய்யவும், ரூ. 10 லட்சம் திட்ட மதிப்பீட்டுக்கு மேல் உற்பத்தித் தொழில் தொடங்கவும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த மதிப்பீடுகளுக்கு கல்வித் தகுதி தேவையில்லை.

    நகர்ப்புற பயனாளிகளில் பொது பிரிவினருக்கு 15 சதவீத மானியம், சிறப்புப் பிரிவினருக்கு 25 சதவீத மானியம், கிராமப்புறங்களில் பொது பிரிவினருக்கு 25 சதவீதம், சிறப்புப் பிரிவினருக்கு 35 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

    மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, கடன் உதவி பெற வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன்பின்னர், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்படும்.

    பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழில்பேட்டை, திண்டுக்கல்-624003 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0451-2470893 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai