Enable Javscript for better performance
உணவுப் பொருள் உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    உணவுப் பொருள் உற்பத்தியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

    By திண்டுக்கல்,  |   Published on : 31st May 2014 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாண் உணவு பொருள்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மத்திய அரசின் அபிடா நிறுவனத்தின் சார்பில் மாவட்ட வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, வேளாண்மை இணை இயக்குநர் ந.சம்பத்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை வணிக அலுவலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

    வேளாண்மை துணை இயக்குநர்(வணிகம்) திட்டத்தின் நோக்கங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

    சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அபிடா நிறுவனத்தின் கள அலுவலர் தங்கம் ராமசந்திரன் கூட்டத்தில் பேசியது:

    விவசாயிகள் தனிநபராக அல்லாமல், குழுக்கள் அமைத்து உணவு பொருள்களை பதப்படுத்த முன் வர வேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களை தரக்கட்டுப்பாடு செய்த பின் வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும்.

    அதற்கான வழிமுறைகள் பற்றியும், ஒவ்வொரு இனத்திற்கும் வழங்கப்படும் மானிய விவரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

    மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் மா, கொய்யா மற்றும் வெங்காயம் உள்ளிட்ட விளைபொருள்களுக்கு ஏற்றுமதி குழுக்கள் அமைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

    கூட்டத்தில், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளைச் சேர்ந்த வேளாண் உணவு உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai