Enable Javscript for better performance
கராத்தே விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் தற்காப்பு கராத்தே விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சன் பில்டர்ஸ் நிறுவனம் சார்பில் பிரையண்ட் பூங்காவில் தற்காப்பு கலையான கராத்தே கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அரிமா சங்க மாவட்டத் தலைவர் டி.பி.ரவீந்திரன் தலைமை வகித்தார். சுற்றுலா அலுவலர் குணசேகரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிடோ-ரியூ கராத்தே பள்ளி மாணவ, மாணவிகளின் செயல்முறை விளக்கம் நடைபெற்றது. கராத்தே பயிலும் சிறுவர் கை மீதும், உடல் மீதும் பைக் ஏற்றிச் சென்ற காட்சி, 40 கிலோ எடையுள்ள ஒருவரை தனது பற்களால் மற்றொரு வீரர் தூக்கியது உள்ளிட்ட பல்வேறு சாகசங்கள் செய்து மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இந் நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ஆஷா ரவீந்திரன், பிரையண்ட் பூங்கா மேலாளர் எபன்ராஜ், உதவிச் சுற்றுலா அலுவலர்கள் அன்பு, சதீஷ், கராத்தே மாஸ்டர் நாகராஜ், 12-ஆவது வார்டு பொது நலச் சங்க உறுப்பினர்கள், சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். மகேந்திரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai