Enable Javscript for better performance
குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்

    By நத்தம்  |   Published on : 31st May 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் மேலமேட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் பெரும்பாலும் கழிவுநீர் வாய்க்கால் இன்றி குடியிருப்புகளுக்கு முன் ஆறு போல் ஓடுகின்றன. இவற்றிற்கு அருகில் குடிநீர் குழாய் உள்ளது. அதிலும் அவை முறைப்படி சிமெண்ட் துôண் அமைத்து பொருத்தாமல் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் அருகிலேயே பள்ளம் தோண்டி தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதிக்கு கழிவு நீர் செல்வதற்கு வாய்க்கால்கள் அமைக்காததால் ஊர் முழுவதும் கழிவுநீர் ஆறுபோல் ஓடுகிறது. கொசுத்தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். எனவே போதிய கழிவுநீர் வாய்க்கால்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai