Enable Javscript for better performance
நல்லாகுளம் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் நகரின் மையப் பகுதியில் நல்லாகுளம் உள்ளது. இது சிறந்த நீர் ஆதாரமாக திகழ்ந்து வந்தது. குடிநீருக்கு பயன்படுத்தப்பட்ட இந்த குளத்து நீர் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் அதன்பின் பேரூராட்சி நிர்வாகம் குளத்தை பராமரிக்கவில்லை.

    இதனால் திறந்த வெளியில் கழிப்பறையாக அப்பகுதி மாறியது. இதனை சீர்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரிந்துரையின் பேரில் குளத்தைத் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி சரிவு தளம் அமைக்க ரூ. 1 கோடியே 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

    குளம் துர்வாரப்பட்டு கரைகள் அகலப்படுத்தப்பட்டு வண்ணக்கல் பதிக்கும் பணியும், நீர்வரத்து வாய்க்கால்கள் சீர் செய்யும் பணியும் முடிவடையும் நிலையில் உள்ளன.

    தற்போது குளத்தின் கரையையொட்டி தடுப்பு கம்பிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து இப்பகுதியை சேர்ந்த செந்தில் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். விரைவில் இப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai