Enable Javscript for better performance
பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அய்யலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அய்யலூர் எஸ்கே நகர் பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தங்களுக்கு பட்டா வழங்க கோரி பலமுறை மனு கொடுத்துள்ளனர். குடிநீர் வசதி, தெருவிளக்கு கேட்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காததை அடுத்து, வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு அய்யலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலர் எஸ்.பி. செம்மன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் ஏ.பி. மணிகண்டன், சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர். அதன் பின்னர், ஜமாபந்தியில் பங்கேற்றிருந்த மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாலத்திடம் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai