Enable Javscript for better performance
பள்ளி வாகனங்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வாளர் சோதனை நடத்தினார்.

    தமிழக அரசு உத்தரவின்படி தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் சோதனையிடப்பட்டு வருகின்றன. கொடைக்கானலிலுள்ள தனியார் பள்ளி வாகனங்கள், வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியதுரை தலைமையில் ஆய்வு செய்யப்பட்டன. வாகனங்களின் படிக்கட்டுகள், அவசர வழி, இருக்கை ஒரங்களில் பாதுகாப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளனவா, பேருந்தின் தளப்பகுதி சரியாக உள்ளதா, முதலுதவிப் பெட்டி, தரமான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளனவா, சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டன.

    இந்த ஆய்வு முடித்து சான்றிதழ் பெற்ற பள்ளிகளின் வாகனங்கள் மட்டுமே மாணவ}மாணவிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். இதுவரை அனுமதி பெற வராத வாகனங்கள் உடனடியாக ஆய்வுக்கு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சில பள்ளிகளின் வாகனங்கள் மோட்டார் வாகன ஆய்வுக்கு சென்றிருப்பதால் 10-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் வரவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai