Enable Javscript for better performance
பாதுகாப்பு வழங்கக் கோரி கிராம மக்கள் மனு- Dinamani

சுடச்சுட

    

    இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பாதுகாப்பு வழங்கக் கோரி ஒருபிரிவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள கோதைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி காணாமல் போனதாக, கடந்த 2 தினங்களுக்கு முன் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், கன்னியம்மாள், இவர்களது மகன் கார்த்திக், உறவினர் இளையராஜா ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    கார்த்திக்கை தவிர்த்து மற்ற அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர், வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரனை சந்தித்து புகார் அளிக்க வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவித்தது: காணாமல் போன மாணவியின் உறவுக்காரப் பெண்களை, ஒரு பிரிவினர் கேலி செய்து வருகின்றனர். மேலும் வியாழக்கிழமை மதியம், பொன்னுச்சாமி என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து பெண்களிடம் வம்பு செய்துள்ளனர்.

    இதனால் எங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai