Enable Javscript for better performance
பாம்பு கடித்து பெண் சாவு:நிவாரணம் வழங்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பாம்பு கடித்து பெண் சாவு:நிவாரணம் வழங்க கோரிக்கை

    By திண்டுக்கல்,  |   Published on : 31st May 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேடசந்தூரை அடுத்துள்ள இ.சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.சௌடீஸ்வரி(33). இவர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரிந்து வந்தார். வேடசந்தூர், வடமதுரை சாலையில் உள்ள புளியமரத்துப்பட்டி பிரிவு அருகே வேலை செய்து கொண்டிருந்த சௌடீஸ்வரியை பாம்பு கடித்துள்ளது. வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த சௌடீஸ்வரியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai