Enable Javscript for better performance
புனித சவேரியார் ஆலயத் திருவிழா: மின் அலங்காரத் தேர் பவனி- Dinamani

சுடச்சுட

    

    புனித சவேரியார் ஆலயத் திருவிழா: மின் அலங்காரத் தேர் பவனி

    By கொடைக்கானல்,  |   Published on : 31st May 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் புனித சவேரியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. கொடைக்கானல் செண்பகனூரிலுள்ள புனித சவேரியார் ஆலயத் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் திருப்பலி மற்றும் சிறப்பு நவநாள் ஜெபவழிபாடு, நற்கருனை ஆராதனை ஆகியவை நடைபெற்றன.

    பங்குத் தந்தை சேவியர்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மின் அலங்காரத் தேர் பவனி நடைபெற்றது. இருதையபுரம், அட்டக்கடி,பிரகாசபுரம் சாலை, தைக்கால், உகார்தே நகர் சாலை ஆகியப் பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல், செண்பகனூர், சீனிவாசபுரம், உகார்த்தே நகர், ஐயர்கிணறு, சகாயபுரம், பிரகாசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பங்குக் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தையர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai