Enable Javscript for better performance
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு புகைப்படம்: பொதுமக்கள் ஏமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு புகைப்படம்: பொதுமக்கள் ஏமாற்றம்

    By திண்டுக்கல்,  |   Published on : 31st May 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு தொடர்ச்சியாக 2 நாள்கள் புகைப்படம் எடுக்காததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, புகைப்படம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை புகைப்படம் எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக புதன்கிழமை காலை முதல், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்ப அட்டைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நண்பகல் 12 மணிக்கு வந்த அதிகாரிகள், மின்தடை காரணமாக புகைப்படம் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். அடுத்த நாள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்றிதழ் பெற்று வருமாறும் தெரிவித்துள்ளனர். அதன்படி வருமான சான்றிதழுடன் வியாழக்கிழமை மீண்டும் புகைப்படம் எடுக்க வந்துள்ளனர். வழக்கம் போல் 12 மணிக்கு வந்த அலுவலர்கள், கேமிரா பழுது அடைந்துவிட்டதாக கூறி வந்தவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் புகைப்படம் எடுóக்க வந்தவர்கள் விரக்தியோடு திரும்பிச் சென்றனர். மீண்டும் வெள்ளிக்கிழமை வந்தவர்களில், ஒரு பகுதியினருக்கு மட்டுமே புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அறிவித்த நாளிலேயே புகைப்படம் எடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் தடை ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் வைக்க வேண்டும். மேலும் புகைப்படம் எடுக்கும் மையத்திலேயே வருமான சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai