Enable Javscript for better performance
மருத்துவ உதவித் தொகையை உயர்த்தக் கோரி தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ உதவித் தொகையை உயர்த்தக் கோரி தீர்மானம்

    By திண்டுக்கல்,  |   Published on : 31st May 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பொதுக்குழு மற்றும் வெள்ளி விழாக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜி.சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எம்.பொன்னையா முன்னிலை வகித்தார்.

    மாவட்ட ஆட்சியர் நா. வெங்கடாசலம், டி.எஸ்.பி.லட்சுமணன், மாவட்ட கருவூல அதிகாரி பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் இந்துமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தற்போது வழங்கப்படும் தொகையை, 3 மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். ஒய்வூதியத்தில் தற்போது வழங்கப்படும் 33 சதவீதத்தை, பழையபடி 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய முறையை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் தங்கவேலு, பழனிச்சாமி, செயலர் மருதையப்பன், பொருளாளர் வரதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai