Enable Javscript for better performance
விராலிப்பட்டியில் \\\"அம்மா\\\' திட்ட முகாம் - Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

    வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆர். மோகன் தலைமை வகித்தார். அதிமுக ஒன்றியச் செயலாளர் எம்.வி.எம். பாண்டியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி சின்னமுத்து வரவேற்றார். தனி வட்டாட்சியர் கேசவன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் 87 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 76 மனுக்கள் முதியவர் உதவித்தொகை, 3 மனுக்கள் ஜாதி சான்றிதழ்,6 மனுக்கள் பட்டா மாறுதல், 2 மனுக்கள் வருமான வரிச்சான்றிதழ் ஆகும். மேலும் இத் திட்ட முகாமில் கிராம நிர்வாக அதிகாரி முருகன், கூட்டுறவு தலைவர்கள் சுதாகர், ஜெயப்பிரகாஷ், ஊராட்சி துணைத் தலைவர் ராஜா, ஊராட்சி செயலாளர் மனோகரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் சுப்பையா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai