Enable Javscript for better performance
2ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு நேரடிசேர்க்கை விண்ணப்பம்- Dinamani

சுடச்சுட

    

    2ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு நேரடிசேர்க்கை விண்ணப்பம்

    By திண்டுக்கல்,  |   Published on : 31st May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொறியியல் படிப்புகளுக்கான 2ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, ஜூன் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி முதல்வர் எஸ்.சக்திவேல் தெரிவித்துள்ளது: 2014-15 கல்வி ஆண்டிற்கான 2ஆம் ஆண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் நேரடியாக சேர விரும்பும் தகுதியுடைய மாணவ, மாணவிகளுக்கான விண்ணப்ப படிவம், பிஎஸ்என்ஏ கல்லூரியில் மே 13ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் சாதிச் சான்றிதழின் நகல் கொடுத்து விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மற்ற பிரிவினர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். ஜூன் 5ஆம் தேதி, விண்ணப்ப படிவம் பெற கடைசி நாள் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai