Enable Javscript for better performance
இந்து மக்கள் கட்சி வாகனப் பிரசாரப் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    இந்து மக்கள் கட்சி சார்பில், பழனியில் வாகனப் பிரசார பயணம் வியாழக்கிழமை தொடங்கியது.

        இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத்தின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அக் கட்சியினர் மதுரையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக ஹிந்துத்துவ கொள்கைகளை பரப்பியும், பழனியில் இருந்து கோவைக்கு வாகனத்தில் பிரசார பயணமும் மேற்கொண்டனர்.   மதுரையில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை பழனி வந்த அக்கட்சியினர், பழனியில் இருந்து கோவைக்கு வாகனப் பிரசாரத்தை அடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் இருந்து துவக்கினர்.

      நிகழ்ச்சிக்கு, மாவட்ட அமைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ரவிபாலன், மாநில அமைப்புக் குழுத் தலைவர் பொன் அச்சாமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

         கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ராம. ரவிக்குமார் பிரசாரத்தை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், செக்கிழுத்த வ.உ.சி.க்கு கோவையில் திருவுருவச்சிலை அமைத்து, அவினாசி சாலைக்கு அவரது பெயரை சூட்டவும், இஸ்லாமிய, கிறித்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை இந்துக்களுக்கும் வழங்கவும்,   மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவும், ஆபாசமாக பெண்களை சித்திரித்து காட்டும் சின்னத்திரை, சினிமா, பத்திரிகைகளுக்கு தடை விதிக்கவும், பசு வதையை தடுக்கவும்,  தமிழகத்தில் நிலத்தடி நீரைப் பாதிக்கும் தோல் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கவும், மழலையர் மற்றும் ஆரம்பக் கல்வி நிலையங்களில் தமிழைக் கட்டாய பாடமாக்கவும், கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்கவும் அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்றார்.  

        நிகழ்ச்சியில், காந்தியவாதி கருப்பையா, மாவட்டத் தலைவர்கள் தர்மா, வேல்முருகன், மாவட்டச் செயலர் ஸ்ரீராம்பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai