Enable Javscript for better performance
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவுப் பணியாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவுப் பணியாளர்கள்

    By திண்டுக்கல்  |   Published on : 17th April 2015 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவுப் பணியாளர்கள், வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

       வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கவேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

      முதல் நாள் போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவுப் பணியாளர்கள், வியாழக்கிழமை 2 ஆம் நாளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

      அதன்படி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டப் பிரிவு சார்பில், திண்டுக்கல் கல்லறைத் தோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ். நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி.எம். ராமு கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் முபாரக் அலி உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தார்.

      இதில், பஷீர் அகமது (திமுக), பாலபாரதி எம்.எல்.ஏ. (சிபிஎம்), முத்துராஜ் (சிஐடியு), கோபால் (பாமக) உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இந்தப் போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட சத்துணவுப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai