Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரத்தில் இந்து மக்கள் கட்சியினருக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரத்தில் இந்து மக்கள் கட்சியினருக்கு வரவேற்பு

    By ஒட்டன்சத்திரம்  |   Published on : 17th April 2015 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரத்தில் இந்து மக்கள் கட்சி நடைபயணக் குழுவினருக்கு புதன்கிழமை வரவேற்பு கொடுக்கப்பட்டது.

      இந்து மக்கள் கட்சியினர் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் இருந்து கோவை ராஜ வீதி வரை, மதுவிலக்கு மற்றும் பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி பரப்புரை பயணத்தை மதுரையில் ஏப்ரல் 12-ஆம் தேதி தொடங்கினர்.

     மாநில பொதுச்செயலர் ராம,ரவிக்குமார் தலைமையில் தொடங்கிய நடைபயணம் புதன்கிழமை ஒட்டன்சத்திரம் சென்றடைந்தது.

    மாநிலச் செயலாளர் வே.ரவிபாலன்,மாநில அமைப்புக்குழுத் தலைவர் பொன்னுச்சாமி,திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தர்மர்,தேனி மாவட்டத் தலைவர் ஆர்.வேல்முருகன் உள்பட பலர் நடைபயணத்தில் பங்கேற்றனர்.

      அவர்களை மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேஷ் தலைமையில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே இந்து மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்து வழி அனுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai