Enable Javscript for better performance
கொடைக்கானல் சாலைகளில் காட்டெருமை நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகள் அச்சம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் சாலைகளில் காட்டெருமை நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

    By கொடைக்கானல்  |   Published on : 17th April 2015 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் நகர்ப்பகுதி சாலைகளில் காட்டெருமை நடமாடியதால் சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை தப்பி ஓடினர்.

    கொடைக்கானலில் சமீப காலமாக நகர்ப் பகுதிகளில் காட்டெருமைகள் நடமாடி வருகின்றன. ஏரிச்சாலைப் பகுதி,அப்சர்வேட்டரி, கீழ்பூமி,உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அதிக எண்ணிக்கையிலான காட்டெருமைகள் வரத் தொடங்கியுள்ளன. விவசாய நிலப் பகுதிகளான சின்னப் பள்ளம்,பெரும்பள்ளம்,பிரகாசபுரம், சகாயபுரம்,உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமைகள் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

    இதனால் விவசாயப் பயிர்களும் சேதமடைந்து வருவதோடு சில நேரங்களில் விவசாயிகளையும் தாக்கி வருகின்றன. தினமும் மாலை நேரங்களில் ஏரிச்சாலை,செவண்ரோடு, கிளப்சாலை,பேருந்து நிலையப் பகுதி உள்ளிட்ட மக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் காட்டெருமைகள் வருவதால் சுற்றுலாப் பயணிகள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து கொடைக்கானல் வனத்துறை அதிகாரி தெய்வ சர்மா கூறியது: கொடைக்கானல் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதால் காட்டெருமைகள் நகர்ப் பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளன. இவை தண்ணீர், உணவைத் தேடி வருகின்றன.

    எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காட்டெருமைகளுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம். அவற்ரால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கலாம், என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai