Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் 407 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை காலை வரை 407 மி.மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

       நத்தம், வேடசந்தூர், அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், திண்டுக்கல் நகரிலும் மாலையில் பெய்த மழை, அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது. நத்தம், குஜிலியம்பாறை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில், தற்போது பெய்துள்ள கோடை மழை மானாவாரி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      திண்டுக்கல் பகுதியில் பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கியதால், சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

     இந்த நிலையில், சென்னையிலிருந்து போடி செல்லும் அரசு விரைவுப் பேருந்து திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே, மழைநீர் தேங்கிய பள்ளத்தில் வியாழக்கிழமை சிக்கிக்கொண்டது. பள்ளத்திலிருந்து பேருந்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்தும் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

      திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):

      திண்டுக்கல் 49.28, கொடைக்கானல் 7.10, நத்தம் 38, நிலக்கோட்டை 17.20, பழனி 81, வேடசந்தூர் 44, சத்திரபட்டி 33, வேடசந்தூர் புகையிலை மையம் 44, கொடைக்கானல் போட் கிளப் 5.75, காமாட்சிபுரம் 88. மொத்தம் 407.63 மி.மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai