Enable Javscript for better performance
\\\"நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்'

    By திண்டுக்கல்  |   Published on : 17th April 2015 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டிருந்தால், அந்தந்த கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்து மீண்டும் பயன் பெறலாம் என ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

     ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் தகுதி நிலையை 100 சதவீதம் தணிக்கை செய்து, தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.

     இதுதொடர்பாக, சிலர் மேல் முறையீடு செய்து அளித்த மனுக்களை விசாரித்து, தகுதிநிலை மீண்டும் சரிபார்க்கப்பட்டது. அதில், தகுதியானவர்களாக கண்டறியப்பட்டவர்களுக்கு, அந்தந்தப் பகுதி வருவாய் கோட்டாட்சியர் மூலம் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

     மேலும், துயர் துடைப்பு நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம் ஆகியவற்றிலும், நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கிடக்கோரி பொதுமக்களிடமிருந்து, ஆட்சியரிடம் மனுக்கள் வழங்கப்படுகின்றன. ஓய்வூதியம் பெற தகுதியான நபர்கள், உரிய ஆவணங்களுடன் அந்தந்தப்பகுதி வருவாய் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்து பயன்பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai