Enable Javscript for better performance
பழனி கிரிவீதியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ரூ.3.33 கோடிக்கு மறுஏலம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி கிரிவீதியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க ரூ.3.33 கோடிக்கு மறுஏலம்

    By பழனி  |   Published on : 17th April 2015 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி நகராட்சி சார்பில், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு நடத்தப்பட்ட மறுஏலம் ரூ. 3.33 கோடிக்கு விடப்பட்டது.

      பழனி திருக்கோயிலுக்கு வரும் வாகனங்கள் கிரிவீதி, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்திக் கொள்ளும்பொருட்டு, நகராட்சி சார்பில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கான ஏலம், நகராட்சி சார்பில் விடப்படுகிறது.

      கடந்த காலங்களில் நகராட்சி சார்பில், கார் ஒன்றுக்கு ரூ. 30, வேனுக்கு ரூ. 50, பேருந்துக்கு ரூ. 75 என கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை உயர்த்த வேண்டும் என கவுன்சிலர்கள் கேட்டதன்பேரில், நகராட்சி நிர்வாகம் வாகனங்களின் கட்டணத்தை உயர்த்தி, கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி இதற்கான ஏலத்தை நடத்தியது.

      அதில், ரூ. 3.25 கோடிக்கு சீனிவாசன் என்பவரால் ஏலம் எடுக்கப்பட்டது.  இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்துள்ள கட்டணம் அதிகம் என்று சில கவுன்சிலர்களும், சரியானதுதான் என சில கவுன்சிலர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இதனால், நகராட்சி நிர்வாகம் ஏலத்தை ரத்து செய்தது.

      பின்னர், புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன், வியாழக்கிழமை மறுஏலம் நடத்தப்பட்டது. இதில், கார் ஒன்றுக்கு ரூ. 50, பேருந்துக்கு ரூ. 100, வேனுக்கு ரூ. 80 என நிர்ணயிக்கப்பட்டது.

      இதில் பலரும் பங்கேற்றும், எவர் ஒருவரும் நகராட்சி நிர்ணயித்த ரூ. 3.30 கோடிக்கு ஏலத்தை எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து, டெண்டர் பெட்டியில் இருந்த கடிதத்தில், திருப்பூர் அமர்ஜோதி நகரைச் சேர்ந்த ரங்கதுரை என்பவர் ரூ. 3.33 கோடிக்கு ஏலத்தை குறிப்பிட்டிருந்தார்.

      எனவே, கிரிவீதி பகுதிகளில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ஏலத்தை, திருப்பூர் ரங்கதுரைக்கு நகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்தது. எனினும், இந்த ஏலம் அதிகத் தொகைக்கு போனது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  அதேபோல், பாளையம் கட்டண கழிப்பறை ரூ. 3 லட்சத்து 62 ஆயிரத்துக்கு ராஜா என்பவர் ஏலம் எடுத்தார்.

      இந்த ஏல நிகழ்ச்சியின்போது, பழனி டி.எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai