Enable Javscript for better performance
மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது- Dinamani

சுடச்சுட

    

    மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

    By திண்டுக்கல்  |   Published on : 17th April 2015 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

       திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள வெங்கிட்டாபட்டியைச் சேர்ந்தவர் கு. வீரன் என்ற மதுரைவீரன். இவர், ஏப்ரல் 8ஆம் தேதி காலை, கணவாய்பட்டி-மேட்டூர் ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளி டிராக்டரில் கடத்தியுள்ளார்.

      அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலக்கோட்டை வருவாய் ஆய்வாளர் கே. சுப்பையா, கிராம உதவியாளர்கள் சங்கர் மற்றும் நாகன் ஆகியோர் டிராக்டரை வழிமறித்து சோதனையிட முயன்றுள்ளனர். ஆனால், வீரன் நிறுத்தாமல் சென்றதுடன், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது டிராக்டரை வைத்து மோதியுள்ளார்.

      இதில், வருவாய் ஆய்வாளர் சுப்பையா காயம் அடைந்தார். இது தொடர்பாக, சுப்பையா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த வத்தலகுண்டு போலீஸார், மணல் திருட்டு மற்றும் கடத்தலில் ஈடுபட்ட வீரனை கைது செய்தனர்.

      இந்த நிலையில், வீரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆ. சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai