Enable Javscript for better performance
வடமதுரை ரயில் நிலைய பிரச்னை: ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    வடமதுரை ரயில் நிலைய பிரச்னை: ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ஆலோசனை

    By திண்டுக்கல்  |   Published on : 17th April 2015 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வடமதுரை ரயில் நிலைய பிரச்னை தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. சரவணனுடன், ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர்(மதுரை) சங்கரகுட்டி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

      திண்டுக்கல்-திருச்சி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்த பின், 15 கிலோ மீட்டர் இடைவெளியில் மட்டுமே ரயில் நிலையம் செயல்பட அனுமதிக்கப்படும் என தகவல் வெளியானது.

      அதன்படி, வடமதுரை ரயில் நிலையத்தை மூடுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால், ரயில் நிலையம் தொடர்ந்து செயல்பட அனுமதி கோரி, வடமதுரை பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம், கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

      இந்த நிலையில், இப்பிரச்னைக்காக ஏப்ரல் 26ஆம் தேதி மீண்டும் ரயில் மறியலில் ஈடுபடுவதற்கு போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

      இதனிடையே, வேடசந்தூர் வட்டாட்சியர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படவில்லை. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஏப்ரல் 26ஆம் தேதிக்கு முன்னதாகவே பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டத்திலும் சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்றால், திட்டமிட்டப்படி ஏப்ரல் 26ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என, பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

      இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்த ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் சங்கரகுட்டி, எஸ்.பி. ஆ. சரவணனுடன் ஆலோசனை நடத்தினார். வடமதுரை ரயில் நிலைய பிரச்னையில், சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசித்ததாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai