Enable Javscript for better performance
விபத்தில் திமுக பிரமுகர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த லாரி திடீரென நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த கார் மோதியதில் திமுக பிரமுகர் உயிரிழந்தார்.

      திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகர திமுக அவைத் தலைவராக இருப்பவர் ஆனந்தன். இவருடைய மகன் மணிகண்டன் (33). இவர், திண்டுக்கல்லில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  திண்டுக்கல் மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளராக இருந்த இவர், புதன்கிழமை இரவு ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு, காரில் திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். ரெட்டியார்சத்திரம் குட்டத்துப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, முன்னால் செங்கல் ஏற்றிச்சென்ற லாரி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

      கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பக்கம் மோதியதில், மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

      இது குறித்து, ரெட்டியார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் வேலு என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai