Enable Javscript for better performance
10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    By திண்டுக்கல்  |   Published on : 17th April 2015 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

      திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலர் எஸ். கருப்பையா தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எம். ராஜ்குமார் பேசியதாவது:

      உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 885 ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் செய்யவேண்டும். ஏற்கெனவே, வெளியான அரசாணையின்படி பள்ளிக் கல்வித் துறையில் 2015-16 கல்வியாண்டில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும் என்றார்.

      ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், நிலையான பயணப் படியை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி சம்பளத்துடன் இணைத்து வழங்கவேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

      இதில், மாவட்ட நிர்வாகிகள் ஆர். சௌந்திரபாண்டியன், எஸ். ஜெகதீசன், ஏ. சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai