Enable Javscript for better performance
ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் தைப்பூச திருவிழா துவங்கவுள்ள நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பழனியில் தைப்பூசத் திருவிழா துவங்கவுள்ள நிலையில் தற்போதே பக்தர்கள் வரவு அதிகரித்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் விதிமுறைகளுக்கு புறம்பாக சரக்குகள் ஏற்றிச் செல்லும் மினி லாரி, வேன், லாரிகளில் கூட்டம், கூட்டமாக வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது அதிக அளவிலான காயமோ, உயிர் பலியோ நேரிடுகிறது.

    இந்நிலையில் திங்கள்கிழமை வாகனத்தின் இருபுறமும் எந்த கதவும் இல்லாத நிலையில், பக்தர்கள் சிலர் சரக்கு வாகனத்தில் கோயிலுக்கு வந்தனர். இதுபோன்ற வாகன பயணத்தின் போது போலீஸார் பிடிக்கும் இடத்திலேயே அபராதம் விதித்தால், இதுபோன்ற பயணம் மேற்கொள்வோர் பயணத்தை தவிர்க்க ஏதுவாகும்.

    இதை கண்டுகொள்ளாத நிலையில் ஆபத்தான பயணம் தொடரவே வாய்ப்பு ஏற்படும். பழனி நகரில் பைபாஸ், கிரிவீதி ரவுண்டானா உள்ளிட்ட பல இடங்களிலும் அவுட்போஸ்ட் அமைக்கப்பட்டாலும் அங்கு எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே, பயணிகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai